5 ஆம் வகுப்பு மாணவிக்கு செருப்பு மாலை - விடுதியை சுற்றிவர வைத்த கொடூரம்!
செருப்பு மாலை அணிவித்து, பேய் போல் மேக்கப் போட்டு சிறுமியை விடுதியை சுற்ற வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குற்றச்சாட்டு
மத்திய பிரதேசம், டம்ஜிபுரா கிராமத்தில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் அரசு விடுதியில் தங்கியுள்ளனர். அதில், 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், விடுதியில் மற்றொரு மாணவி வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், திருடியதாக தனது மகளுக்கு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றிவர வைத்தாக விடுதி காப்பாளர் மீது சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அதில், விடுதியின் பெண் காப்பாளர்,
கொடுமை
மாணவியின் முகத்தில் கருப்பு நிற வண்ணம் பூசி பேய் போல் மேக் அப் போட்டு, மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்துள்ளனர். மகளை சந்திக்க விடுதிக்கு சென்றபோது தனக்கு நடந்த கொடூரம் குறித்து அவர் தெரிவித்ததாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பெண் விடுதி காப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.