2வது திருமணம்.. ஜோடியை சிறுநீரை குடிக்க வைத்த குடும்பம் -அதிர்ச்சி!
2வது திருமணம் செய்த ஜோடியை அவரது குடும்பம் சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
2வது திருமணம்
ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள மதோராஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டாவது திருமணத்தால் கோபமடைந்த முதல் மனைவியின் சகோதரர்கள் பியாடி குக்கிராமம் அருகே அவரை அழைத்து வந்து காலணிகளால் மாலை அணிவிக்கப்பட்டு,
பின்னர் சிறுநீரை குடிக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த ஜோடிக்கு மேலும் ரூ.45,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தெரிவிக்கையில், “இதில் சம்பந்தப்பட்ட நபருக்கு 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது.
செருப்பு மாலை
அதன் பிறகு இருவரும் வரதட்சனை பிரச்சனை தொடர்பாக அவரது மனைவியை பிரிந்து வாழ்கிறார். சில மாதங்களுக்கு முன்னாள் இந்த நபர் வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்தார். இது குறித்து முதல் மனைவி, ராஜஸ்தான் கிராம ’காப்' பஞ்சாயத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வாலிபரையும், அவரின் 2வது மனைவியையும் பஞ்சாயத்து பெரியவர்கள் விசாரித்தனர். 2வது திருமணம் செய்த குற்றத்துக்காக வாலிபருக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்த அவர்கள், இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்தனர்.
மேலும், இருவருக்கும் பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரை கொடுத்து குடிக்க வைத்துள்ளனர்.
அதன்பின் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.