திருமணமான பின் பிறந்த வீட்டுடன் பெண்ணுக்கு தொடர்பு இல்லையா? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Cuddalore Marriage Madras High Court
By Sumathi Nov 10, 2023 04:19 AM GMT
Report

பிறந்த வீட்டுடன் பெண் உறவு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

திருமணம்

கடலூர், ஜெயங்கொண்டம் கிராம பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு, அந்த கிராமத்தில் ஜி.மாயக்கண்ணன், பி.சரண்யா ஆகியோர் விண்ணப்பம் செய்தனர். இதில் சரண்யா வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையில் பஞ்சாயத்து செயலாளராக நியமிக்கப்பட்டார்.

A girl has no connection with her birth house after marriage

அதன்பின், திருமணமாகி கணவருடன் நெய்வேலியில் வசித்துள்ளார். இதனால், தன்னை செயலாளராக நியமிக்க உத்தரவிடக் கோரி மாயக்கண்ணன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, மணமான பெண் கணவர் வீட்டில் வசிப்பதுதான் வழக்கம் என்பதாலும்,

சிறுநீர் கழித்து அவமதித்த பழங்குடியினரின் காலை கழுவிய முதல்வர் - இணையத்தில் வைரல்!

சிறுநீர் கழித்து அவமதித்த பழங்குடியினரின் காலை கழுவிய முதல்வர் - இணையத்தில் வைரல்!

பெண்ணுக்கு தொடர்பு? 

கணவர் குடும்பத்தின் குடும்ப அட்டையில் சேர்ப்பதற்காக பெற்றோரின் குடும்ப அட்டையிலிருந்து பெண்ணின் பெயர் நீக்கப்படுகிறது என்பதாலும், அதன்பின்னர் பிறந்த வீட்டுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டார் என கூற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

cuddalore

மேலும், பஞ்சாயத்து செயலாளர் என்பவர் அவசர பணிக்காக உடனடியாக வருவதை உறுதி செய்வதற்காகவும், உள்ளூர் நிலவரங்கள், தேவைகள், பிரச்சனைகளை தெரிந்திருப்பார் என்பதால் தான் உள்ளூரை சேர்ந்தவர் என குடியிருப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டுமென நிர்பந்திக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.