கல்யாணத்திற்கு மறுப்பு - காதலியின் பகீர் செயலால் தாலி கட்டிய காதலன்!

Cuddalore
By Sumathi Sep 11, 2023 12:14 PM GMT
Report

திருமணத்திற்கு மறுத்த காதலனை, போராடி காதலி திருமணம் செய்துள்ளார்.

கல்யாணத்திற்கு மறுப்பு

பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் புதுநகரைச் சேர்ந்தவர் வசந்தகுமார் மகள் அசீனா(19). பொற்றோர் இல்லாத நிலையில், பாட்டி மாலா என்பவர் வீட்டில் தங்கியுள்ளார்.

கல்யாணத்திற்கு மறுப்பு - காதலியின் பகீர் செயலால் தாலி கட்டிய காதலன்! | Girl Marry Lover In The Police Station Cuddalore

தொடர்ந்து, கடலூர் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் தென்னரசு(27) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

காதலி அதிரடி

இவர் ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்து காதலை வளர்த்து வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தென்னரசுவை அசீனா கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே அசீனா மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதனையடுத்து தென்னரசு சம்மதம் தெரிவித்த நிலையில், காவல் நிலைய வளாகத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அசீனாவின் கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.