திருமணத்திற்கு முன் உடலுறவு தவறல்ல; கணவர் அப்படி என்று முதலிரவில் தெரிந்தது - பிக்பாஸ் பிரபலம் கருத்து!
பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஸ்ரீ ராபகா உடலுறவு குறித்த தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீ ராபகா
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ ராபகா தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் இறங்கினார். கடந்த 2017ம் ஆண்டு கிராக் கபடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் நடன நிகழ்ச்சிகள் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தென்னிந்திய இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கிய "நேக்ட்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிட்ட கருத்து ஒன்று பேசுபொருளாகியுள்ளது.
சர்ச்சை கருத்து
அதில்' திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது தவறில்லை. திருமணத்திற்கு பிறகு கணவன் ஆண் இல்லை என்று தெரிந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவோம் என்று தனது தோழி ஒருவருக்கு நடந்த சம்பவத்தை குறித்து பதிவிட்டுள்ளார்.
என் தோழி மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் முதல் இரவில் தான் அவளின் கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிய வந்தது. இதனால் என் தோழியின் வாழ்க்கை வீணாக போய் விட்டது. திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டு இருந்தால் அவர் அந்த விஷயத்தில் எப்படிப்பட்டவர் என்பது தெரிய வந்திருக்கும். திருமணத்தை தவிர்த்து இருக்கலாம்.
ஒவ்வொரு ஆணுக்கும் செக்ஸ் இன்றியமையாதது, இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியாதவரை திருமணம் செய்து கொண்டு வருத்தப்படுவதில் என்ன பயன் என்று, நடிகை ஸ்ரீ ராபகா , உடல் உறவு குறித்து பதிவிட்டிருந்தார். இந்த கருத்துகள் இப்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.