காதலனின் சடலோத்தோடு திருமணம் செய்த பெண் - கொடூர சம்பவம்
காதலனின் சடலத்தோடு, காதலி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தந்தை வெறிச்செயல்
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சாக்சம் டேட். அவரது காதலி ஆஞ்சல் மாமித்வார். தனது சகோதரர்கள் மூலம் சாக்சம் ஆஞ்சலுக்கு பழக்கமாகி உள்ளார்.

ஆஞ்சலின் சகோதரர்கள் உடன் சாக்சம் அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்றதன் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் சுமார் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆஞ்சலின் வீட்டில் பிரச்னை ஆகியுள்ளது.
மகள் கோரிக்கை
இருப்பினும் இருவரும் பழகி வந்துள்ளனர். தொடர்ந்து ஆஞ்சல் டேட்டை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பதை ஆஞ்சலின் சகோதரர்களும், தந்தையும் அறிந்து. டேட்டை தலையில் சுட்டு, கல்லை வைத்து மண்டையை உடைத்து, கொலை செய்திருக்கின்றனர்.

இந்நிலையில், சாக்சம் டேட்டின் இறுதிச் சடங்குகளின்போது ஆஞ்சல் தனது உடலில் மஞ்சள் பூசி, நெற்றியில் குங்குமத்தை பூசி, இறந்த தனது காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்டார். மேலும், அவர் தனது வாழ்நாள் முழுவதும் அவரது மனைவியாகவே, அவருடைய வீட்டிலேயே வாழ முடிவு செய்திருக்கிறார்.
மேலும், சாக்சம் டேட்டை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர்.