2 ஆண் நண்பர்கள்; இடையூறாக இருந்த தாய் - 13 வயது வளர்ப்பு மகள் வெறிச்செயல்
2 ஆண்களை காதல் செய்ய இடையூறாக இருந்த தாயை 13 வயது வளர்ப்பு மகள் கொலை செய்துள்ளார்.
கண்டித்த தாய்
ஒடிசாவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி(54). 13 ஆண்டுகளுக்கு முன்பு இவரும், இவரது கணவரும் குழந்தை இல்லாததால், புவனேஷ்வரில் 3 நாட்களேயான பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளனர்.
தொடர்ந்து ஒரே ஆண்டில் கணவரும் இறந்துவிட, அந்த பெண் குழந்தையை இவர் மட்டும் வளர்த்து வந்துள்ளார். பின் படிப்பிற்காக இருவரும் பராலகேமுண்டிக்கு குடிபெயர்ந்து, வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமிக்கு கணேஷ் ரத் (வயது 21), மற்றும் தினேஷ் சாஹு (20) என்ற இரண்டு ஆண் நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த ராஜலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் ரத், சிறுமியை மூளைச்சலவை செய்து, ராஜலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், அவரது சொத்துக்களை பறிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
மகள் வெறிச்செயல்
இதனையடுத்து அந்த சிறுமியும் தனது தாய்க்கு தூக்க மாருந்து கலந்துகொடுத்து, அவர் தூங்கியவுடன் தலையணையை வைத்து கொலை செய்துள்ளார். உறவினர்களிடம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாக சிறுமி கூறியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு பின் சிறுமி தனது செல்போனை புவனேஷ்வரில் விட்டுச் சென்றுள்ளார். அந்த போனை பார்த்த ராஜலட்சுமியின் சகோதரர் அதிர்ச்சியடைந்துள்ளார். இன்ஸ்டா மூலம் எப்படி கொலை செய்வது என்று கணேஷ் ரத்துடன் உரையாடியது தெரியவந்துள்ளது.
உடனே தகவலின்பேரில், 3 பேரையும் கைது செய்த காவல்துறை, அவர்களிடமிருந்து 30 கிராம் தங்க நகைகளையும், 3 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.