சுடுகஞ்சி மேலே கொட்டியதில் சிறுமி துடிதுடித்து பலி!
சுடுகஞ்சி மேலே கொட்டியதில் காயமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
சிறுமி பலி
திருவள்ளூர், சிப்காட் தொழிற்பேட்டை அருகே புதுப்பேட்டை என்ற பகுதி உள்ளது. அங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.
அதில் ஒரு வாடகை வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
தீவிர விசாரணை
இந்நிலையில், சமையல் வேலைகளை பிகாஷ் ரவிதாசின் மகளான சிறுமி நந்தினி செய்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அலுமினிய பாத்திரத்தில் இருந்த சாதத்தை சிறுமி வடிக்க முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக கொதிக்கும் உலையுடன் கூடிய சாதம்,
அப்படியே அவரது வயிற்று பகுதியில் கவிழ்ந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.