81 வயது மூதாட்டியின் வயிற்றில் இறந்த குழந்தை - அதுவும் 56 வருடங்களாக - என்ன காரணம்?
81 வயது மூதாட்டியின் அடி வயிற்றுப் பகுதியில் 51 வருடங்களாக இறந்த குழந்தை இருந்துள்ளது.
ஸ்டோன் பேபி
பிரேசில் நாட்டை சேர்ந்த டேனிலா வேரா (81) என்ற மூதாட்டிக்கு அடி வயிற்றில் அதிகப்படியான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 3டி ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.
அப்போது அந்த மூதாட்டியின் அடி வயிற்றுப் பகுதியில் இறந்த குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவ முறையில் இந்த கரு ஸ்டோன் பேபி (Stone baby) என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக கருப்பையில் உருவாகும் கரு, இவருக்கு கருப்பைக்கு வெளியே உண்டாகியுள்ளது. இந்த நிலை இடம் மாறிய கர்ப்பம் (ectopic pregnancy) என குறிப்பிடப்படுகிறது.
அறுவை சிகிச்சை
இவரின் இளம் பருவத்தில் முதன்முறை கருவுற்றபோது இந்த இடம் மாறிய கர்ப்பம் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. கருப்பையை விட்டு வெளியில் வளரும் கரு, போதிய வளர்ச்சியின்றி இறந்துவிடும்.
இறந்த கரு சில நாட்களில் ஸ்டோன் பேபியாக மாறிவிடும். 7 குழந்தைகளுக்கு தயான பின்பும் டேனிலாவிற்கு பெரியளவில் அறிகுறிகள் தெரியவில்லை. முதல் குழந்தை பிறந்தபோதிலில் இருந்து வயிற்றில் ஏற்பட்ட சிறிய வலி நாளடைவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து 3டி ஸ்கேன் எடுத்து பார்த்தலில் ஸ்டோன் பேபி இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் ஸ்டோன் பேபி நீக்கப்பட்டது. ஆனால் அந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.