Single'ஆ நீங்க - என் கூட டேட்டிங் வர்றீங்களா? 1500 தான் - பட்டியலிட்டு அலறவிட்ட இன்ஸ்டா டோலி
பெண் ஒருவரின் இன்ஸ்டா பதிவு பலரையும் அதிரவைத்துள்ளது.
இன்ஸ்டா மோகம்
இன்றைய தலைமுறையினரிடம் அன்பு, காதல், பிணைப்பு போன்றவை குறைந்து விட்டதாக முந்தின தலைமுறையை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினாலும், அதனை இந்த 2கே கிட்ஸ் மறுத்து தான் பேசி வருகிறார்கள்.
ஆனால், தற்போதைய தலைமுறையிடம் இனம் தெரியாத ஒரு மீடியா புகழை தேடும் உணர்வு உள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் எதையாவது செய்து பிரபலமாகி விட வேண்டும் என பலரும் கோமாளித்தனங்களை செய்து வருகிறார்கள்.
அவர்களுக்கு follower'களும் கிடைக்கிறார்கள். எப்படியென்று பார்த்தால், follow செய்பவர்களும் இவர்களை போலவே ஒன்று எண்ணத்தில் தான் பெரும்பாலும் இருக்கின்றன.
உணர்வு ரீதியிலான ஒரு பிணைப்பு இவர்களிடம் குறைந்து விட்டதும் உண்மை தான். சிறுவயதிலேயே டேட்டிங் செல்வது என்பதை இயல்பாக்கி விட்டார்கள்.அதிலும் தவறில்லை என்றாலும், அதற்கு ஒரு பட்டியல் போட்டு காசு பார்க்க நினைப்பது கொச்சையானது தான்.
அப்படி ஒரு பெண், தன்னுடன் டேட்டிங் செல்ல இவ்வளவு கட்டணம் என பட்டியலிட்டு இன்ஸ்டாவில் பதிவிட அது காட்டு தீ போல பரவியுள்ளது. பலரும் வாயடைத்து போயுள்ளார்கள். விஷயமென்னவென்றால் அப்பெண் வெளிப்படையாக தனது புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
டேட்டிங் போலாமா...
அவரின் பட்டியலில் தவறான விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும், டேட்டிங் செல்ல, துணையுடன் குடும்பத்தை சந்திக்க, தனியாக சமைத்து சாப்பிட, இருவரும் பைக் ரைடிங் செல்ல, இரண்டு நாள் முழு டேட்டிங் என பல வகை ஆஃபர்களை அப்பெண் வாரி வழங்கியுள்ளார்.
வழக்கம் போல அப்பெண்ணின் பதிவுகள் வைரலான நிலையில், சமூகவலைத்தளத்தில் மட்டும் மும்முரமாக இயங்கும் சமூகநீதி காவலர்கள் அப்பெண்ணை வசைபாட துவங்கிவிட்டனர். இந்த generation புரிஞ்சிக்கவே முடியலையே.