தரக்குறைவாக பேசி இணையத்தில் வெளியிட்ட அரசு ஆசிரியை - இளம்பெண் தற்கொலை!
அரசு பள்ளி ஆசிரியர் மோசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துள்ளார்.
ஆசிரியர் கொடுமை
சென்னை, மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சவுபாக்கியம்(40) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில், பியூலா(35) என்பவர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாகவும், இல்லம் தோறும் கல்வி திட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வகுப்பும் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஆசிரியை சவுபாக்கியம், பியூலாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து புகாரளித்ததில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, தொடர்ந்து அவர் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
பெண் தற்கொலை
இதனால் மனமுடைந்த பெண் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனையடுத்து, பியூலாவின் உறவினர்கள், பள்ளிக்கு சென்று ஆசிரியரை தாக்கினர்.
இதனால் ஆசிரியை சவுபாக்கியத்திடம் மேற்கொண்ட விசாரணையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பதிவிட்டு இருந்தார் என்பதும், அவதூறான வார்த்தைகளில் பேசியதும் உறுதியானது.
அதனைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.