திருமணமான 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை - என்ன நடந்தது?
வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 40 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை முத்துமாரி அம்மன் காலனியைச் சேர்ந்த பவானீஸ்வரியும், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 3-ம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
பின்னர் அதே தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து 15 நாட்களாக வாழ்ந்து வந்த நிலையில் கார்த்திக்கும், பவானீஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டையிட்டுள்ளனர்.
இதனால் ஆத்திமடைந்த பவானீஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று கார்த்திக் மனைவி பவானீஸ்வரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனைவியிடம் சமாதானம் பேச முயன்றுள்ளார்.
அங்கு மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்துடன் தனது அறைக்குச் சென்ற பவானீஸ்வரி நீண்ட நேரமாக வெளியே வரானல் இருந்துள்ளார்.
கதவு திறக்கபடாமல் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது பவானீஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பவானீஸ்வரியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குபதிவு செய்து கணவரான கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் பவானீஸ்வரிக்கு வரதட்சணை கொடுமை அதிகரித்ததாக கூறப்படுகிறது.