10 ஆண்டுகள்..மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை - நீதிபதி கொடுத்த தண்டனை!
மகளுக்கு 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை
கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 2023ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளியில் தேர்வு நடந்தபோது அவரது செயல்பாட்டை பார்த்து சந்தேகமடைந்த ஆசிரியர் அந்த மாணவியை தனியாக அழைத்து சென்று பேசியுள்ளார்.
அப்போது, கூலித்தொழிலாளியான தனது தந்தை தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை இது குறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் குழந்தைகள் நலக் குழுவினரும் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது. பாதிக்கப்பட்ட மாணவி ஒன்றரை வயதில் இருந்தப்போது அவரது தாயார் இறந்துவிட்டார். அதன்பிறகு, மாணவியின் தந்தை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
தண்டனை
அவர்களுடன் மாணவி தங்கியிருந்தார். இந்த சூழலில் மாணவிக்கு 5 வயதான போதிலிருந்தே தொடர்ந்து தனது தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். தனக்கு நடந்த கொடுமைகளை மாணவி கூறியதன் அடிப்படையில், அந்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கில் சேர்க்கப்பட்ட 26 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு
அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சாகும்வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஷிபு உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ1.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்