கோவிலுக்கு சென்ற சிறுமி.. காட்டு பகுதியில்.. நண்பனின் கண் முன் நடந்த கொடூரம்!
கோவில் சென்ற சிறுமியை மூன்று பேரு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமி..
மத்தியப் பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியும் அவரது அவரது 21 வயது ஆண் நண்பரும் அப்பகுதியில் உள்ள வனதேவி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு வழிப்பட்ட பிறகு திரும்பிக் கொண்டிருந்தபோது
சில்வானி-சாகர் சாலையில் உள்ள சியர்மாவ் காட்டுப்பகுதி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதனை கவனித்த அவ்வழியாக வந்த டிரக் ஓட்டுநர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் அவர்களை நெருங்கினர்.
கொடூரம்
இருவரையும் சுற்றி வளைத்த அவர்கள் பெண்ணின் நண்பனைக் கடுமையாகத் தாக்கினர். சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மூன்று பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் சிறுமியும் இளைஞரும் தப்பிக்க முயன்றனர் ஆனால் இருசக்கர வாகனத்தின் சாவியை அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். எனவே அங்கிருந்து சாலை வழியாக நடந்தே போலீசிடம் சென்றுள்ளனர்.
நடந்தை கூறி அவர்கள் அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மற்றொருவனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.