வேறொரு நபரை காதலித்த காதலி... நடுரோட்டில் சராமரியாக கத்தியால் குத்தி கிழித்த காதலன் - வேலூரில் பயங்கரம்
5 வருட காதல்
வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூரைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் யாஷினி. இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
யாஷிக்கும், சதீஷூக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் 5 வருடமாக ஒருவரையொருவரை காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் சதீஷுடன் பேசுவதை யாஷினி திடீரென நிறுத்தியுள்ளார். சதீஷை சந்திப்பை தவிர்த்து வந்துள்ளார் யாஷினி.
சராமரியாக கத்தியால் தாக்குதல்
இந்நிலையில், யாஷினி திருவலம் காவல் நிலையம் சாலையில் தனது தோழியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சதீஷ், யாஷினியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் சண்டையாக முற்றியது.
இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யாஷினியின் கழுத்து, முகம் மற்றும் பிற பகுதிகளில் சராமரியாக வெட்டி குத்தி தள்ளினார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் யாஷினி மயங்கி கீழே விழுந்தார்.
அப்போது தப்பிச் செல்ல முயன்ற சதீஷை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த யாஷினியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சதீஷிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இதுகுறித்து சதீஷ் பேசுகையில், நானும், யாஷினியும் காதலித்து வந்தோம். திடீரென அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் அவர் வேறு ஒரு மாணவருடன் அடிக்கடி பேசுகிறார். அவர் அந்த மாணவரை காதலிப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது பற்றி நான் கேட்டபோது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் யாஷினியை கத்தியால் குத்தினேன் என உண்மையை ஒப்புக்கொண்டார்.
பட்டப்பகலில் மாணவி ஒருவரை மாணவன் கத்தியால் சராமரியாக குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் வேடமிட்டு 7 பேரை கொன்ற கொலையாளி : வெளியான அதிர்ச்சி தகவல்