விபரீதமான விளையாட்டு: சிறுமியின் உயிரைப் பறித்த லிஃப்ட்!

Crime Mumbai Death
By Sumathi Nov 02, 2022 07:54 AM GMT
Report

 லிஃப்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளையாடிய சிறுமி  

மும்பை, சாத்தே எனும் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா கரவி(16). இவர் மன்குர்த் பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு பண்டிகைக்காகச் சென்றுள்ளார். அங்கு இந்தச் சிறுமி தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

விபரீதமான விளையாட்டு: சிறுமியின் உயிரைப் பறித்த லிஃப்ட்! | Girl Dies In Lift Accident In Mumbai

அப்போது, அருகில் மறைந்திருந்த தனது தோழிகளை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது லிஃப்டில் இருந்த ஜன்னல் போன்ற திறப்பில் தலையை விட்டு பார்த்துள்ளார். திடீரென லிஃப்ட் கீழே இறங்க சிறுமியின் தலையில் மோதி உயிரிழந்தார்.

விபரீதம்

அதனைத் தொடர்ந்து அந்த ஹவுசிங் சொசைட்டியை அதிகாரிகள் அலட்சியமாக நடத்துவதாக சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமியின் தந்தை கூறுகையில், இது மாதிரியான அவலங்களைத் தவிர்க்க வீட்டுவசதி சங்கம் இதுபோன்ற திறப்பை கண்னாடியால் மூடியிருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகாரளித்தனர். அதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து வீட்டுவசதி சங்கத் தலைவர் மற்றும் செயலாளரை கைது செய்துள்ளனர்.