பிறந்த நாள் கேக் சாப்பிட்டு பலியான 10 வயது சிறுமி - வெளியான அதிர்ச்சி காரணம்!

India Punjab Death
By Jiyath Apr 23, 2024 04:05 AM GMT
Report

பிறந்த நாள் கேக் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி காரணம் ஒன்று வெளியாகியுள்ளது.  

சிறுமி பலி 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியை சேர்ந்தவர் மான்வி (10). இந்த சிறுமியின் 10-வது பிறந்தநாளை கடந்த 24-ம் தேதி அவரது குடும்பத்தினர் கொண்டாடினர். அதற்காக பாட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஆன்லைன் மூலமாக கேக் ஆர்டர் செய்துள்ளனர்.

பிறந்த நாள் கேக் சாப்பிட்டு பலியான 10 வயது சிறுமி - வெளியான அதிர்ச்சி காரணம்! | Girl Dies Cake High Levels Synthetic Sweetener

இதனையடுத்து கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மான்வி, அதனை குடும்பத்தினருக்கு ஊட்டி விட்டுள்ளார். பின்னர் அவரும் கேக் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுமிக்கு தொண்டை வறண்டு தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அவர் மாறி மாறி வாந்தி எடுத்துள்ளார். இது போன்று பாதிப்பு அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் மான்வியை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நண்பர் வீட்டு மாடியில் மாணவி; மறுப்பு தெரிவித்த காதலன் - இறுதியில் நடந்த சோகம்!

நண்பர் வீட்டு மாடியில் மாணவி; மறுப்பு தெரிவித்த காதலன் - இறுதியில் நடந்த சோகம்!

சோதனை முடிவு 

அதற்காக சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி அதனை ஆய்வுக்கு அனுப்பினர். தற்போது அந்த சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், saccharine எனப்படும் செயற்கை ஸ்வீட்னர் கேக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்டது உறுதியானது.

பிறந்த நாள் கேக் சாப்பிட்டு பலியான 10 வயது சிறுமி - வெளியான அதிர்ச்சி காரணம்! | Girl Dies Cake High Levels Synthetic Sweetener

இதனை மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் விஜய் ஜிண்டால் உறுதி செய்துள்ளார். பொதுவாக நாம் வெளியே வாங்கி சாப்பிடும் உணவு மற்றும் பானங்களில் சிறிதளவு saccharine பயன்படுத்தப்படும். ஆனால், இதன் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் கூட உடலில் இருக்கும் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு மிக வேகமாக உயரும் அபாயம் உள்ளது. இந்த சிறுமியின் உயிரிழப்பிலும் இதுதான் நிகழ்ந்துள்ளது.

இந்த செயற்கை ஸ்வீட்னர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட பேக்கரி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பேக்கரியின் உரிமையாளர் மீது ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.