எமனாக வந்த 10 ரூபாய் கூல் ட்ரிங்ஸ்.. துடிதுடித்து உயிரிழந்த 5 வயது பிஞ்சு - கதறும் பெற்றோர்!
திருவண்ணாமலை அருகே 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூல்ட்ரிங்ஸ்
திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டம் கனிகிலுப்பை கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு 5 வயதான காவியா ஸ்ரீ என்ற மகள் இருந்தார். .
இவர் அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டின் அருகேயுள்ள பெட்டிக்கடையில் காவியா ஸ்ரீ 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் ஒன்றை வாங்கி குடித்துள்ளார்.
அதனை குடித்த சிறுது நேரத்திலேயே சிறுமி காவியாஸ்ரீக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளியதோடு, சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி
உடனடியாக சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்ததில் சிறுமி காவியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் கூல்ட்ரிங்ஸை குடித்து தனது குழந்தை உயிரிழந்ததாக கூறி ராஜ்குமார் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம்அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.