திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி - மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திமுக பொதுக்கூட்டம்
கொங்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில் தங்கி இருந்து நலத்திட்ட பணிகளை முடுக்கி விடுவதுடன் , நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, அமமுக, பா.ஜ.க உட்பட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த
அதிமுக - ஆறுகுட்டி
ஆயிரக்கணக்கானவர்களை திமுகவில் இணைக்கும் விழாவானது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் இணையலாம் என்பதால் அனைத்து கட்சியினர் மத்தியிலும்
இந்த பொதுகூட்டம் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டு யாரெல்லாம் திமுகவில் இணைய போகின்றனர் என்பதை அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உற்று கவனித்து வருகின்றனர்.
தேமுதிக - தினகரன்
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த ஆறுகுட்டி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருந்தார். இவர், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில்
கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இருமுறை வென்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். மேலும் அவரைத் தொடர்ந்து தேமுதிகவைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் தினகரனும் திமுகவில் இணைந்தார்.