திமுக ஊழல் பட்டியலை வெளியிட அண்ணாமலைக்கு என்ன தகுதி? சீமான் ஆவேசம்!
திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது என நாதக தலைவர் சீமான் கூறியுள்ளார்.
சீமான்
பாரதிய ஜனத கட்சியில் சேர்ந்து துணை தலைவரான அண்ணாமலை சில ஆண்டுகளிலேயே மாநில தலைவர் ஆனார்.
எதிர்க்கட்சி வரிசையில் தமிழ்நாட்டில் அரசியல் செய்து வரும் பாஜக ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபடவில்லை என்றும் பொதுமக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யவில்லை என்றும்
அண்ணாமலைக்கு என்ன தகுதி
கட்சியின் சுய ஆதாயத்துக்காக அரசியல் செய்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான், திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது.
ரபேல் ஊழல் கோப்பையே காணாமல் ஆக்கியவர்கள் பாஜகவினர். பாஜகவில் உள்ள அண்ணாமலை ஊழல் பற்றி பேசக் கூடாது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவின் ஊழல் குறித்து அண்ணாமலை பேசுவாரா?
மதுரை ஆதீனம், ஜீயர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதியாமல் கருத்து சுதந்திரம் என்று அமைச்சர் சொல்வது தவறு எனக் குற்றஞ்சாட்டினார்