10-ம் வகுப்பு மாணவி, காதலனுடன் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி ஸ்டேட்டஸ்!
10-ம் வகுப்பு மாணவி, காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு?
திருச்சி, கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சித்ரா. இவர்களின் மகள் ஸ்ரீநிதி(15). அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியே சென்ற ஸ்ரீநிதி வீடு திரும்பவில்லை. உடனே பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்,
ஜோடி தற்கொலை
அதே கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு மரத்தில் மாணவியும், வாலிபரும் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்துள்ளனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடலை மீட்டத்தில், உயிரிழந்தது மாணவி ஸ்ரீநிதி என்றும், அதே பகுதியை சேர்ந்த நைனான் என்ற அஜித்குமார் (19) என்றும் தெரியவந்தது.
அஜித்குமார் தனது செல்போனில் ஸ்ரீநிதியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு அதில், `மிஸ் யூ ஆல் போய்ட்டு வாரேன்' என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோவும் செல்போனில் இருந்துள்ளது. மேலும், ஸ்ரீநிதியின் கழுத்தில் தாலி இருந்துள்ளது.
இதனால் இருவரும் காதலித்து வந்து இருக்கலாம், காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டு, தூக்கில் தொங்கி இருக்கலாம் என்று சந்தேகித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.