இறந்த தாய் என்னை அழைக்கிறாங்க... - மகன் தூக்குப்போட்டு தற்கொலை..! - அதிர்ச்சி சம்பவம்

Chennai Death
By Nandhini Dec 02, 2022 03:10 PM GMT
Report

இறந்த தாய் என்னை அழைக்கிறாங்க என்று மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகன் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (29). இவர், தந்தை மற்றும் தம்பி ராஜீ (27) ஆகியோருடன் வசித்து வருகிறார். ராஜுவின் தாயார் கடந்த 18 வருடங்களுக்கு முன் உடல்நிலை குறைவால் உயிரிழந்து விட்டார்.

இதனால் அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக, 'தாயை பார்க்க ஆசையாக இருக்கிறார். என்னை அவர் கூப்பிடுகிறார் என்று சகோதரி ரஞ்சிதாவிடம் ராஜீ கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கச் சென்ற பிறகு, ராஜீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

son-committed-suicide