இரட்டைக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை - திருமணமாகி 3 வருஷம்தான்..
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு
சேலம், மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோமதி(29). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் பிரகாஷ்(32) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருந்தனர்.
திருப்பூரில் சிறு தையல் நிறுவனம் நடத்தி வந்த பிரகாஷ், கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பினார். தொடர்ந்து மீண்டும் தொழிலுக்கு திரும்பியுள்ளார்.
இளம்பெண் தற்கொலை
இதுகுறித்து கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மனமுடைந்த கோமதி இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் ஒரு குழந்தை மட்டும் சீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோமதியும், ஒரு குழந்தையும் உயிரிழந்து விட்டனர்.
தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.