காப்பக படுக்கையில் சிறுநீர் கழித்த பெண் குழந்தை - பிறப்புறுப்பை சிதைத்து சித்திரவதை!

Kerala India Crime
By Swetha Dec 04, 2024 10:12 AM GMT
Report

 படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமியை சித்திரவதை செய்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 குழந்தை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒரு காப்பகம் இயங்கி வருகிறது. குழந்தைகள் நலக்குழு மூலமாக நடத்தப்பட்டு வரும் இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்த இரண்டரை வயது பெண் குழந்தை மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை சேர்க்கப்பட்டனர்.

காப்பக படுக்கையில் சிறுநீர் கழித்த பெண் குழந்தை - பிறப்புறுப்பை சிதைத்து சித்திரவதை! | Girl Child Who Urinated In Bed Got Tortured Badly

இந்த நிலையில், சம்பவத்தின்போது அந்த இரண்டரை வயது பெண் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த காப்பாளர் அஜிதா என்ற பெண், குழந்தையின் பிறப்புறுப்பில் தாக்கி காயப்படுத்தி இருக்கிறார்.

பெண்களை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த ஆந்திர போலீசார் - பரபரப்பு புகார்!

பெண்களை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த ஆந்திர போலீசார் - பரபரப்பு புகார்!

சித்திரவதை

அதுமட்டுமின்றி அங்கு பணிபுரிந்து வந்த மகேஸ்வரி, சிந்து என்ற இரண்டு பெண்களும் பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் அந்த குழந்தை வலியால் துடித்துள்ளார். மேலும் அந்த பெண் குழந்தையை காப்பக ஊழியர்கள் குளிக்க வைத்த போது,

காப்பக படுக்கையில் சிறுநீர் கழித்த பெண் குழந்தை - பிறப்புறுப்பை சிதைத்து சித்திரவதை! | Girl Child Who Urinated In Bed Got Tortured Badly

குழந்தை வலியால் பயங்கரமாக துடித்துள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அக்குழந்தை கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிறுமியின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இது குறித்து குழந்தைகள் நலக்குழுவின் பொதுச்செயலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இது பற்றி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இரண்டரை வயது பெண் குழந்தையை துன்புறுத்திய அஜிதா, மகேஸ்வரி, சிந்து ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.