ப்ரேக் அப் பரிதாபங்கள்: கொடுத்த கிஃப்டுகளை வாங்க வந்த காதலன் - பெண் பக்கா ப்ளான்

Tamil nadu Attempted Murder Crime Kanyakumari
By Sumathi Nov 13, 2022 06:41 AM GMT
Report

காதலனை வரவழைத்து கூடிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய காதலியால் பரபரப்பு ஏற்பட்டது.

ப்ரேக் அப்

கன்னியாகுமரி, மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின். இவர் டிப்ளமோ முடித்து வெல்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அணக்கரை பகுதியை சேர்ந்த ஜெஸ்லின்(19) என்ற கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ப்ரேக் அப் பரிதாபங்கள்: கொடுத்த கிஃப்டுகளை வாங்க வந்த காதலன் - பெண் பக்கா ப்ளான் | Girl Attack Ex Boyfriend In Kanyakumari

பழக்கம் காதலாக மாறி ஒருவருக்கொருவர் நெருங்கி பழகிய நிலையில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி பிரவினிடம் கூறியுள்ளார். பிரவினும் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார்.

காதலி ஸ்கெட்ச்

இதில் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் இரண்டு வருடத்திற்கு பின் திருமணம் செய்து வைக்கலாம் என கூறியுள்ளனர். இந்நிலையில் ஜெஸ்லின் கடந்த ஒரு மாதமாக பிரவின் உடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கி கொள்ள, அவரது நடத்தையில் சந்தேகமடைந்த பிரவின் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார்.

இதில், ஜெஸ்லின் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஜெனித் என்பவருடன் தொடர்பில் இருப்பதையும் அவருடன் பைக்கில் சுற்றி திரிவதையும் அறிந்து கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின் பிரவினிடம் நான் தற்போது ஜெனித்தை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் என்னை மறந்து விடு என்றும் கூறியுள்ளார்.

தாக்குதல்

இதனால் மனமுடைந்த பிரவின் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கேட்டுள்ளார். வேர்கிளம்பி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். பிரவின் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில்,

எதிரே ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கொண்ட கூலிப்படை கும்பல் பிரவினின் இருசக்கர வாகனத்தை மோதி கீழே தள்ளி விட்டு சரமாரியாக பிரவினை தாக்க தொடங்கினர். அப்போது, அங்கு திரண்ட பொதுமக்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரவின் சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் காதலி ஜெஸ்லின், ஜெனித் மற்றும் கூலிப்படை நபர்கள் 2-பேர் என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவர்களை தேடிவருகின்றனர்.