வீட்டில் காதலனுடன் தனிமையில் தங்கை; கதவை தட்டிய அண்ணன் - நடந்த விபரீதம்!
தங்கையின் காதலன், அவரது சகோதரரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலனுடன் தனிமை
மகாராஷ்டிரா, நவிமும்பை பன்வெல் தேவிச்சாபாடா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். தொடர்ந்து அங்கு வந்த காதலனுடன் தனியாக இருந்துள்ளார்.
வீட்டார் வெறிச்செயல்
திடீரென பெண்ணின் அண்ணன் அங்கு வந்து கதவை தட்டியுள்ளார். வெகுநேரமாக தட்டியும் இளம்பெண் கதவை திறக்காமல், நீண்ட நேரத்திற்கு பின் திறந்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே தங்கையுடன் அவரது காதலன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அண்ணன் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே வீட்டிற்கு வந்த தந்தை மற்றும் அண்ணன் இருவரும் ஆத்திரத்தில் பெண்ணின் காதலனை அரிவாள், மண்வெட்டியால் தாக்கியுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த போலீஸார்,
இளைஞரின் சடலத்தை மீட்டு, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பெண்ணின் அண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய இளம்பெண்ணின் தந்தையையும் தேடி வருகின்றனர்.