காதலனுடன் தனிமையில் அக்கா; நேரில் பார்த்த 2 சிறுமிகள் - வீடு திரும்பிய பெற்றோர்கள் கதறல்!
உத்திரபிரதேசத்தில் 2 சிறுமிகளை சகோதரியே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் கொலை
உத்திர பிரதேச மாநிலம் பகதூர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்வீர் சிங். இவருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ஜெய்வீர் சிங் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வயலுக்கு சென்றுள்ளார்.
அப்போது மகள்கள் அஞ்சலி (19), சுர்பி ( 6), ரோஷ்ணி (4) ஆகிய மூவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். வயலில் இருந்து தந்தை, தாய் மற்றும் மகன்கள் வீடு திரும்பியபோது சுர்பி, ரோஷினி இருவரும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட நிலையில் ரத்த வெள்ளத்தில் தனித் தனி அறைகளில் கிடந்துள்ளனர்.
இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்து அங்கு வந்த போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சகோதரி கைது
இந்நிலையில் போலீசாரின் சந்தேகம் மூத்த மகள் அஞ்சலி பக்கம் திரும்பியது. இதனையடுத்து அஞ்சலியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 'தனது சகோதரிகளை கொலை செய்ததை அஞ்சலி ஒப்புக்கொண்டார்.
மேலும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் அஞ்சலியை சந்திக்க அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளான். இதனை பார்த்த சிறுமி சுர்பி தந்தையிடம் சொல்லிவிடுவதாக கூறியுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி மண்வெட்டியை கொண்டு சுர்பியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனை கண்ட ரோஷ்ணியையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் சகோதரி அஞ்சலி. இதனையடுத்து அஞ்சலியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.