தாயின் காதலனின் தம்பியுடன் சிறுமி செய்த செயல் - பதறிய குடும்பம்!

Relationship Crime Kanyakumari
By Sumathi Sep 20, 2024 12:37 PM GMT
Report

தாயின் காதலனின் தம்பியுடன் சிறுமி ஒருவர் வீட்டை விட்டு வெறியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

  தாய் தகாத உறவு 

கன்னியாகுமரி, திருவிதாங்கேடைச் சேர்ந்த 34 வயது பெண் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். 16 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர்.

தாயின் காதலனின் தம்பியுடன் சிறுமி செய்த செயல் - பதறிய குடும்பம்! | Girl Abscond With Mothers Affair Kanyakumari

இதில் மகள் 9ம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளி படிப்பை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில், குருந்தன்கோடை சேர்ந்த சிவக்குமார் என்ற இளைஞருடன் தாய்க்கு பழக்கம் ஏற்பட்டு அவரும் இவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

மகள் செய்த செயல் 

இதனைத் தொடர்ந்து, சிவக்குமாரின் தம்பி கண்ணன் என்பவர், அண்ணனை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வந்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று திருவிதாங்கோட்டிலுள்ள தாத்தா வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார்.

தாயின் காதலனின் தம்பியுடன் சிறுமி செய்த செயல் - பதறிய குடும்பம்! | Girl Abscond With Mothers Affair Kanyakumari

அங்கு ஃபோனில் கண்ணனுடன் பேசியுள்ள அவர், திருமணம் செய்துக்கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதற்கிடையில் பேத்தியை காணாமல் தவித்த தாத்தா, அவரது தாய்க்கு தகவல் அளித்துள்ளார்.

அப்போதுதான் கண்ணனையும் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. உடனே, தாய் இதுதொடர்பாக போலீஸில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.