இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பாதது நாட்டின் துரதிர்ஷ்டம் - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

Shri Giriraj Singh BJP Pakistan
By Karthikraja Jul 19, 2024 06:39 AM GMT
Report

அனைத்து இஸ்லாமியர்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருந்தால் நாட்டின் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளார்.

கிரிராஜ் சிங்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பீகாரை சேர்ந்த கிரிராஜ் சிங் தற்போதைய அரசில் ஜவுளித் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் கடந்த இரண்டு பாஜக அமைச்சரவையிலும் ஊரக வளர்ச்சி, சிறு குறு தொழில், மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தார். 

giriraj singh

கடந்த நாடாளுமன்றதேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய இவர் `இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. எனக்கும் அவர்களுக்காகப் பணியாற்றுவதில் விருப்பமில்லை.' என கூறினார். இந்த பேச்சு அப்பொழுதே கடும் சர்ச்சையானது. 

யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவிக்கு ஆபத்து? துணை முதல்வர் எதிர்ப்பால் பரபரக்கும் உத்தரபிரதேசம்

யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவிக்கு ஆபத்து? துணை முதல்வர் எதிர்ப்பால் பரபரக்கும் உத்தரபிரதேசம்

பாகிஸ்தான்

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (17.07.2024) செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், `1947 ம் ஆண்டு அனைத்து இஸ்லாமியர்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருந்தால் நாட்டின் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். அவர்களை அனுப்பாதது தான் இந்த நாட்டின் துரதிர்ஷ்டம். 

giriraj singh

1947 ம் ஆண்டு நமது முன்னோர்கள் சிலர் மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டபோது அனைத்து இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், சனாதனம் மீது கலாசார தாக்குதல் நடத்தும் விதமாக யாரும் கேள்விகளை எழுப்பியிருக்க முடியாது” என பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின் பேசிய மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, "பாஜகவின் மோசமான செயல்பாட்டிற்கு பெங்கால் இஸ்லாமியர்கள் தான் காரணம்" என பேசியது சர்ச்சையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.