7 வருட வைட்டிங்..! புஜாரா பிறகு சரியாக செய்து காட்டிய கில்..! குவியும் பாராட்டுக்கள்..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இளம் வீரர் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இந்தியா முன்னிலை
இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு இலக்காக 399 ரன்களை நிர்ணயித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் (இன்றும், நாளையும்) இருக்கும் நிலையில், வெற்றி என்பது இரு அணிக்கும் சமமான ஒன்றாகவே இருக்கின்றது.
3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 67 ரன்களை எடுத்துள்ளது. ஜாக் கிராலி(Zack Crawley) 29 ரன்களும், ரேகான் அகமது 9 ரன்னுடன் களத்தில் இருக்கின்றார். 3-ஆம் நாள் ஆட்டத்தில் சுப்மன் கில் சதம் பல பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சற்று சறுக்கலான ஃபார்மில் இருந்து சுப்மன் கில் மீண்டும் பழைய அதிரடி ஃபார்மிற்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.டெஸ்ட் போட்டிக்கு கில் சரியாக இருக்கமாட்டார் என வந்த விமர்சனத்திற்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதே போல, இந்திய அணியில் மிடில் ஆர்டர் அதாவது 3-வது மற்றும் 4-வது விக்கெட் இடத்திற்கு நீண்ட காலமாக சரியான வீரரை அணி நிர்வாகம் தேடி வந்தது.
ஏனென்றால், 3-வது விக்கெட்டிற்கு களமிறங்கும் வீரர் ஒருவர் சதம் விளாசி 7 ஆண்டுகள் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் நட்சத்திர ஆட்டக்காரர் புஜாரா சதம் விளாசியிருந்தார்.