630 அடிக்கு கீழ் பரந்து விரிந்து கிடக்கும் காடு - புதைந்த குழிக்குள் இப்படியொரு அதிசயமா!
630 அடி ஆழத்திற்கு கீழ் பரந்து விரிந்து கிடக்கும் காடு கண்டறியப்பட்டுள்ளது.
மூழ்கிய குழி
தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் குகை ஆய்வாளர்கள் ஒரு மடுவின் அடிப்பகுதியில் காடு ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர். அது வளர்ந்து வரும் 130 மீட்டர் உயரமுள்ள மரங்களைக் கொண்டுள்ளது.

630 அடி ஆழம் மற்றும் 176 மில்லியன் கன அடிக்கு மேல் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் காடு சிங்க் ஹோல் எனப்படும் பாரிய மூழ்கிய குழியில் அறியப்படுகிறது.
ஹெவன்லி பிட்
இந்த குகைகளில் இதுவரை அறிவியலால் அறிவிக்கப்படாத அல்லது விவரிக்கப்படாத இனங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சிங்க்ஹோல்கள் கார்ஸ்ட் நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும் மற்றும் நிலத்தடி நீர் பாறைகளை கரைக்கும் போது இப்படியான குழிகள் உருவாகிறது.

இதனால் குகை அறையின் மேற்புறம் இடிந்து விழுகிறது. இந்த மூழ்கும் குழிகளை உள்ளூர்வாசிகள் 'டியான்கெங்' அல்லது 'ஹெவன்லி பிட்' என்று அழைக்கின்றனர். இந்த மூழ்கும் குழி அழகானது தான் அதே சமயம் ஆபத்தானது, விசித்திரமானது மற்றும் செங்குத்தானது எனப்படுகிறது.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan