அடேங்கப்பா... 46 அடி நீளம், 21 அடி உயரம் கொண்ட கார் - உலகையே திரும்பிப்பார்க்க வைத்த நபர்!

Dubai World
By Vinothini Jul 29, 2023 12:23 PM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 ஷேக் ஒருவர் மிகப் பெரிய காரை உருவாக்கி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ரெயின்போ ஷேக்

துபாய் நாட்டைச் சேர்ந்தவர் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான். இவர் துபாயின் ரெயின்போ ஷேக் என்ற புனைப் பெயரோடு மிகவும் பிரபலமானவர். இவர் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவராவார், இவரது சொத்து மதிப்பு மொத்தம் 1லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்.

giant-hummer-car-video-goes-viral

கார் பிரியரான இவர் கார்களின் பல்வேறு கலெக்சன்களை வைத்துள்ளார். உலகிலேயே அதிக அளவில் கார்களை வைத்திருப்பவர் என்ற கின்னஸ் சாதனைக்கும் சொந்தக் காரர் இவர், இவரிடம் மொத்தமாக 718 கார்கள் உள்ளன.

மிக பெரிய கார்

இந்நிலையில், இவர் 46 அடி நீளம், 21. 6 அடி உயரம் மற்றும் 19 அடி அகலத்தில் கஸ்டமைஸ் செய்து புதிய ஹம்மர் H1 காரை வாங்கியுள்ளார். இது தற்பொழுது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதில் நான்கு டீசல் எஞ்சின்களுடன் சாதாரணமாக ஓட்டக் கூடிய வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டள்ளது.

giant-hummer-car-video-goes-viral

இந்த காரை இவர் வீடியோ பதிவு செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த ஹம்மர் H1 காரின் அசல் உருவத்தில் இருந்து சிறிது கூட மாற்றம் செய்யப்படாமல் அச்சு அசலாக அப்படியே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.