யூரோ கால்பந்து மைதானத்தில் உலகையே திரும்பி பார்க்க வைத்த ‘தல அஜீத்’ ரசிகர்கள்!
யூரோ கால்பந்து மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டு தல அஜீத் ரசிகர்கள் போர்டு வைத்து, உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.
ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் தல அஜீத் நடித்து வரும் படம் ‘வலிமை’. இப்படத்திற்கு அஜித் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளிவரவில்லை.
இதனால், அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண பிரபலங்கள் மற்றும் பூசாரி வரை யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்நிலையில், இந்திய அணி விளையாட கூடிய கிரிக்கெட் மைதானங்களில் வலிமை அப்டேட் கேட்டு போர்டு பிடித்து வந்த அஜீத் ரசிகர்கள், தற்போது மேலும் ஒரு படி மேலே போய், யூரோ கோப்பை கால்பந்து போட்டி நடைபெறக்கூடிய மைதானத்தில் ‘வலிமை’ அப்டேட் கேட்டு போர்டு பிடித்துள்ளார்கள்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.