33 வயதாகியும் கல்யாணம் ஆகல, குழந்தை இல்ல - புலம்பும் விஜய்யின் தங்கை

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை நான்சி ஜெனிஃபர் சமீபத்தில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
ஜெனிஃபர்
விஜய், த்ரிஷா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான படம் கில்லி. இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இன்றும் பலரது ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது. இதில், நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் நடிகை நான்சி ஜெனிஃபர்.
மேலும், புவனா கதாபாத்திரம் மற்றும் அரிசி மூட்டை எனும் செல்லப்பெயர் அனைவரது கவனம் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து ஜெனிஃபர் கிழக்குகரை, இதுதான் டா சட்டம், தாயகம், சக்தி, நேருக்கு நேர், உளவுத்துறை, சந்திப்போமா, கண்மணி உனக்காக, டைம், கில்லி, பிப்ரவரி 14,
Still Single
உனக்கும் எனக்கும், தோழா, தீயா வேலை செய்யணும் குமாரு, கூட்டத்தில் ஒருவன், ட்ரிப், மஹா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதுகுறித்து பகிர்ந்த பதிவில், எனக்கு 33 வயசாகுது, இன்னமும் திருமணம் ஆகல, குழந்தையும் இல்லை, சொந்தமா வீடு கூட இல்லை. அதெல்லாம் என் பிரச்சனை. அதைப்பத்தி கேள்விக் கேட்கிறவங்களுக்கு இதுதான் பதில் டாஷ் டாஷ்.. இந்த உலகத்திலேயே என்னைப் போன்ற ஒருத்தி நான் மட்டும் தான். நான் ஹேப்பியாத்தான் இருக்கேன். ஹேப்பியாத்தான் இருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.