இளைஞர்களை கதற விடும் புதிய டேட்டிங் டிரெண்ட் - அப்படி என்ன மோசம்?
Zombied எனும் புதிய டேட்டிங் டிரெண்ட் ஒன்று தற்போது நடைமுறையில் உள்ளது.
டேட்டிங் டிரெண்ட்
தற்போதைய காலக்கட்டத்தில் நகர்ப்புறங்களில் டேட்டிங் என்பது மிகவும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. நெருக்கமானவர்களுடன் டேட்டிங் செல்வதைத் தாண்டி, அதற்கான செயலிகளை பயன்படுத்தும் கலாச்சாரம் வந்துவிட்டது. பிறகு சாதாரணமாக பழகுவதற்கே அதனை பயன்படுத்தும் ட்ரெண்டாக மாறியது.

இதுபோன்று பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், உறவுமுறை குறித்த வார்த்தை நடைமுறையும் வழக்கமான ஒன்றுதான். அப்படி வைரலான ஒன்று தான் கோஸ்டிங். கோஸ்டிங் என்பதை சிம்மரிங் மற்றும் ஐசிங் (simmering and icing) என்றும் அழைப்பார்கள்.
Zombied
ஒருவருடன் நன்கு பழகி வரும் நபர் திடீரென, எந்தவொரு காரணமும் இல்லாமல் நியாயமும் இல்லாமல் முன்னெச்சரிக்கை கூட இல்லாமல் அனைத்து தொடர்புகளையும் நிறுத்திக் கொள்வதாகும். இந்நிலையில், தற்போது Zombied எனும் வார்த்தை முறை தலைதூக்கியுள்ளது. இது கோஸ்டிங்கை காட்டிலும் மிக மோசமானதாக கருதப்படுகிறது.

ஜாம்பிட் என்றால் உறவில் இருந்த நபர் நீண்ட காலம் விலகி சென்று, பின் திடீரென ஒருநாள் மீண்டும் நமது வாழ்க்கைக்கு வந்துவிடுவதாகும். இது குறித்து அமெரிக்காவின் டேட்டிங் செயலி வல்லுநர் சமந்தா ஜென் கூறுகையில், "நீங்கள் முடிந்துவிட்டதாக நினைத்த உறவில் இருந்த நபர் திடீரென உங்கள் வாழ்க்கையில் நுழைவதுதான் இது.
இதில் கொடுமை என்னவென்றால் தவறை உணராத அவர்கள், மீண்டும் நார்மலாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். அவர்களை ஏற்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan