வேலை அதிகமாக இருக்கு.. 10 நோயாளிகளை விஷ ஊசி போட்டு கொன்ற நர்ஸ்!
பணி சுமை அதிகமாக இருப்பதாக கூறி நர்ஸ் ஒருவர் 10 பேரை கொன்றுள்ளார்.
பணி சுமை
ஜெர்மன், வூர்சிலன் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆண் ஒருவர் நர்சாக பணியாற்றி வந்தார். மருத்துவமனையில் பணி என்பது ஷிப்ட் அடிப்படையில் இருக்கும்.

அந்த ஆண் நர்ஸ்க்கு இரவு பணியும் வந்தது. ஆனால் தனது பணி சுமையை குறைக் வேண்டும் என்பதற்காக சிகிச்சை பெற்று வரும் 10 பேரை கொன்றுள்ளார்.
நர்ஸின் செயல்
இரவு பணியின்போது முதியவர்களுக்கு பெயின் கில்லர் மற்றும் மயக்க மருந்து தொடர்பான ஊசிகளை போட்டு கொன்றுள்ளார். மேலும் 27 பேரை கொல்ல முயன்றுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நர்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக ஜெர்மனியில் 2 மருத்துவமனைகளில் நர்ஸாக பணியாற்றிய நீல்ஸ் ஹெகல் மொத்தம் 85 நோயாளிகளை கொன்றார். இவர் 1999 முதல் 2005 காலக்கட்டத்தில் இந்த கொலைகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.