ராகுல் காந்தி விவகாரம்: குரல் கொடுக்கும் ஜெர்மனி - பதற்றத்தில் மோடி!
வெளிநாடுகளின் தலையீட்டை தேவையில்லாமல் இழுப்பதாக, காங்கிரசை பாஜக தலைவர்கள் சாடியுள்ளனர்.
ராகுல்காந்தி
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர், இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்திக்கு எதிரான கோர்ட்டு தீர்ப்பு பற்றியும், அவரது எம்.பி. பதவி பறிப்பு பற்றியும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.

ராகுல்காந்தி மேல்முறையீடு செய்யும் மனநிலையில் இருக்கிறார். அதில்தான், இந்த தீர்ப்பு நிற்குமா? பதவி பறிப்புக்கு முகாந்திரம் உள்ளதா? என்று தெரிய வரும். நீதித்துறை சுதந்திரம், அடிப்படை ஜனநாயக கொள்கைகள் ஆகியவை ராகுல்காந்திக்கு எதிரான வழக்கிலும் பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி ஆதரவு
இந்தக் கருத்துக்களை இணைத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், 'இந்தியாவில் நடக்கும் ஜனநாயகப் படுகொலையை ஜெர்மனி கவனித்து வருவதற்கு நன்றி' என குறிப்பிட்டிருந்தார். இதற்கு, பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, அனுராக் தாக்குர், பியுஷ் கோயல் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.