தன்னைப் போலவே இருந்த பெண்ணை கொடூர கொலை செய்த மாடல் - இதுதான் காரணமாம்.!
தன்னை போன்று இருந்த மற்றொரு பெண்ணை மாடல் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்ப பிரச்சணை
ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி ஷஹ்ரபான்(23). சமூக வலைதளத்தில் பியூட்டி டிப்ஸ் கொடுப்பதன் மூலம் பிரபலமானார். திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர் ஷேகிர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பெற்றோரிடம் தான் தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு சென்றிருக்கிறார்.
ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் ஷஹ்ரபானை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இங்கோல்ஸ்டாட் என்ற நகரில் ஷஹ்ரபானின் காரை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த காரில் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.
கொடூர கொலை
அது ஷஹ்ரபான் என அனைவரும் நம்பினர். அதனையடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்ட அந்த பெண் ஜெர்மனியை சேர்ந்த வேறு ஒரு மாடல் அழகியான கதீட்ஜா ஓ என்பதும் தெரியவந்தது. ஷஹ்ரபான் குடும்ப பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆட முடிவு செய்திருக்கிறார்.
அதற்கு தன்னை போலவே இருக்கும் பெண்ணை தேடி கொலை செய்துள்ளார். அதற்காக இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகளை பயன்படுத்தி கதீட்ஜா என்பவருடம் பழகியுள்ளார். அழகு சாதன பொருட்களை தருவதாக கூறி கதீட்ஜாவை ஷஹ்ரபான் நேரில் அழைத்துள்ளார்.
அதை நம்பி சென்ற கதீட்ஜாவை ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிர் காரில் அழைத்து சென்றனர். வனப்பகுதியில் இருவரும் அவரை குத்திக் கொலை செய்துள்ளனர். அதன்பின் தலைமறைவாகியுள்ளனர். அதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.