பழைய சாமான் விற்று...இப்போ Burj Khalifa'வில் 22 வீடு..! யார் இந்த ஜார்ஜ்..?
நாம் சினிமாவில் பார்த்தது போல, நிஜவாழ்க்கையிலும் பலர் வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து உச்சத்தை தொட்டுள்ளனர்.
பழைய சாமான் விற்று...
அப்படி ஒருவர் தான் ஜார்ஜ் வி நேரேபரம்பில். கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர், தற்போது Burj Khalifa கோபுரத்தில் உள்ள 900 அபார்ட்மெண்ட்களில் 22-ஐ தனது வசம் வைத்துள்ளார்.
ஆனால், ஜார்ஜ் பரம்பர பணக்காரர் என்றால் அது தான் இல்லை. தனது வாழ்க்கையை மிகவும் கீழ் மட்டத்திலிருந்து துவங்கி, தற்போது உலகின் அதிக உயரம் கொண்ட கட்டிடத்தை ஆதிக்கம் செலுத்தி வருகிறார் ஜார்ஜ்.
ஜார்ஜின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் கடினமாக சூழலை சந்தித்த காலத்தில், 11 வயதில் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்வதும், பழைய சாமான்களை விற்கும் தொழிலக்ளை ஜார்ஜ் செய்துள்ளார்.
AC தொழில்...
ஒரு கட்டத்தில் மெக்கானிக்காகவும் பணியாற்றியுள்ள அவர், ஷார்ஜாவுக்கு சென்ற பிறகு பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. Middle East அதாவது மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சியடைய துவங்கிய காலகட்டத்தில்,
அப்பகுதிகளில் பாலைவன உஷ்ணத்தைப் போக்குவதற்கு AC தொழிலில் ஈடுபட துவங்க, தற்போது Geo group of Companies'இன் உரிமையாளராக உள்ளார் ஜார்ஜ். தற்போது ஜார்ஜ் சொத்து மதிப்பு இந்திய மதிப்பீட்டில் சுமார் ரூ. 4800 கோடி என கணக்கீடப்படும் நிலையில், பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ஜார்ஜ் வி நேரேபரம்பில்.