தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் - பிரியாணியால் முடிவை மாற்றிய ஆச்சர்யம்!
பிரியாணியால் இளைஞர் ஒருவர் தற்கொலை முடிவை மாற்றியுள்ளார்.
தற்கொலை முடிவு
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் 45 வயது டைல்ஸ் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அவரது மனைவி 2வது மகளுடன் பிரிந்து சென்று விட்டார்.
எனவே வியாபாரி மூத்த மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வேலை இல்லை என்பதால் வறுமையில் வாடியவர் பாலத்தின் மீது ஏறி கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
பிரியாணி ஆசை
இதனால் அப்பகுதியில் பரபரப்பு காரணமாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே, சம்பவ இடம் விரைந்த போலீஸார் அவரிடம் மெதுவாக பேச்சுவார்த்தை நடத்தி வேலை வாங்கி தருவதாக கூறியதை அவர் நம்பவில்லை.
STORY | Kolkata man climbs down bridge after police lure him with job, biryani
— Press Trust of India (@PTI_News) January 23, 2024
READ: https://t.co/H6STQs1Qw3
VIDEO:
(Source: Third Party) pic.twitter.com/R7w4zslvvc
மேலும், உடனே உங்களுக்கு சாப்பிட பிரியாணி வாங்கி தருவதாக கூறியவுடன் அந்த நபர் பிரியாணி மீது உள்ள ஆசை காரணமாக கீழே இறங்கியதாக தெரிகிறது.
இதனையடுத்து, அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யாமல் அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது.