புற்றுநோய்..ஏழைகளை விட பணக்காரர்களை அதிகம் பாதிக்கிறது? ஆய்வில் ஷாக் தகவல்!
புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுபவர் யார் என நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
புற்றுநோய்
பணக்காரர்களை விடவும் ஏழைகள் தான் அதிகளவு நியால் பாதிக்கப்படுவார்கள் என்ற கூற்று பொதுவெளியில் நிலவி வருகிறது. ஏனென்றால், பணக்காரர்களுக்கு கிடைக்கும் உணவு, மருத்துவம். பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றால் அவர்கள் நோயில் இருந்து பாதுகாக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
இது போன்ற காரணங்கள் சாதாரண நோய்களுக்கு அடங்கும். ஆனால், மரபுரீதியிலான புற்றுநோய் பாதிப்புகளை பொறுத்தளவில், ஏழைகளைவிட பணக்காரர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது சமூக-பொருளாதார நிலை மற்றும் பல்வேறு நோய்களுக்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்தது. அதில், ஏழைகளை விட பணக்காரர்களுக்கு மரபணு ரீதியாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என அந்த ஆய்வில் தெரியவந்தது. பெரும்பாலும், பணக்காரர்களுக்கு மார்பகம், புரோஸ்டேட் மற்றும் பிற வகை புற்றுநோய்கள் மரபணுரீதியாக
ஏழை - பணக்காரர்
அவர்களை அதிக அளவு பாதிக்கப்படுவதாக ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக்காக, 35 முதல் 80 வயதுடைய 2,80,000 பின்லாந்து குடிமக்களுக்கான சுகாதாரத் தரவுகள், அவர்களின் சமூக-பொருளாதார நிலை மற்றும் மரபணு ஆகியவற்றை ஆராய்ச்சி குழு சேகரித்தது.
இவை மருத்துவ ஆபத்து முன்கணிப்பு மாதிரிகள், பாலினம், வயது போன்ற அடிப்படை மக்கள்தொகை தகவல்களை உள்ளடக்கியது. அதன்படி, மரபணுத் தகவல்களை சுகாதாரப் பாதுகாப்பில் இணைக்கும்போது இத்தகைய சூழல் முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்வது ஒரு முக்கியமான முதல் படியாகும்.
ஆனால் இப்போது, நோய் அபாயத்தின் மரபணு முன்கணிப்பு ஒரு தனிநபரின் சமூக-பொருளாதார பின்னணியைப் பொறுத்தது என்பதை நாம் காட்ட முடியும். எனவே நமது வாழ்நாள் முழுவதும் நமது மரபணு தகவல்கள் மாறாது என்றாலும், நாம் வயதாகும்போது அல்லது நமது சூழ்நிலைகளை மாற்றும்போது நோய் அபாயத்தில் மரபணுவின் தாக்கம் மாறுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.