பெற்றோர் புகைபிடித்தால் குழந்தைக்கு புற்றுநோய் - பழக்கத்தை நிறுத்த வழிமுறைகள்!
பெற்றோர்கள் புகை பிடிப்பதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.
புகை பிடித்தல்
ஆண்டுதோறும் புகைபிடிப்பவர்கள் அதிகமாகி வருகின்றனர். 30 சதவீதம் பேருக்கு புகையிலைனால் புற்றுநோய் வருவதுடன் மாரடைப்பும் ஏற்படுகிறது.
இந்தியாவில் 8 முதல் 9 லட்சம் பேர் புகையிலைனால் இறக்கின்றனர். பெற்றோர்கள் புகை பிடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
வழிமுறைகள்
எனவே, புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம். புகை நிறைந்த சூழ்நிலையையும், புகைபிடிக்கும் நண்பர்களையும் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும் உணர்வு தோன்றும்போது உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
புகைப்பதற்கு மாறுதலாக வாசிப்பது, பாடுவது போன்ற தங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம். மேலும், புகை பிடிக்கும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம், நுரையீரலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கலாம்.
புகைப்பதை நிறுத்தியபின் அதை நினைவூட்டும் எந்த விஷயத்தையும், பொருட்களையும் வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும் தவிர்க்க வேண்டும்.