பிரேக்-அப் ஆகிருச்சு; லீவு கேட்ட Gen Z ஊழியர் - ஓனரின் அசத்தல் பதில்!
பிரேக்-அப் ஆனதால் விடுப்பு கேட்ட Gen Z ஊழியரின் லெட்டர் வைரலாகி வருகிறது.
பிரேக்-அப்
டெல்லி, குருகிராமில் உள்ள நாட் டேட்டிங் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜஸ்வீர் சிங், தனது ஊழியர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.

அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், "Gen Z-க்கு ஃபில்டர்ஸ் (filters) என்றெல்லாம் கிடையாது!" என்று குறிப்பிட்டு, "சார், எனக்கு சமீபத்தில் பிரேக்-அப் ஆகிவிட்டது.
லீவு கேட்ட Gen Z
என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்குச் சிறிது ஓய்வு தேவை. இன்று நான் வீட்டில் இருந்து வேலை செய்கிறேன், ஆனால் 28-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை விடுப்பு எடுக்க விரும்புகிறேன்.”

இதுதான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் நேர்மையான லீவு லெட்டர் என பதிவாகியுள்ளது. இதனைப் பார்த்த பயனர் ஒருவர், "முக்கியமான கேள்வி என்னவென்றால், நீங்கள் விடுப்பை அனுமதித்தீர்களா? என்பதுதான்" என்று கூறினார்.
அதற்குப் பதிலளித்த ஜஸ்வீர் சிங், "விடுப்பு உடனடியாக அனுமதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.