EX உடன் சேர்ந்து லிவ்-இன் காதலனை கொலை செய்த பெண் - பகீர் பின்னணி!
முன்னாள் காதலனுடன் சேர்ந்து லிவ்-இன் காதலனை இளம்பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
டெல்லி, திமர்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் ராம்கேஷ் மீனா (32) என்பவர் தீப்பிடித்து எரிந்து சடலமாக கிடந்தார். தொடர் விசாரணையில் மீனா கொலை செய்யப்பட்டிருப்பது அங்குள்ள சிசிடிவி மூலம் தெரியவந்தது.

பின் அதனை ஆய்வு செய்ததன் மூலம், மீனாவுடன் `லிவ் இன்' ரிலேசன்ஷிப்பிலிருந்த அம்ரிதா(21), அவரின் முன்னாள் காதலன் ஸ்மித் மற்றும் மேலும் ஒருவருடன் சேர்ந்து கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இளம்பெண் கொலை
அம்ரிதாவிடம் விசாரணை நடத்தியதில் மீனா எடுத்த அம்ரிதாவின் வீடியோவை டெலிட் செய்ய மறுத்து அதனைக் காட்டி மிரட்டி வந்ததால் இக்கொலையை செய்ததாக தெரிவித்துள்ளார். மீனாவும், அம்ரிதாவும் காதலித்து வந்த நிலையில், அம்ரிதாவின் முன்னாள் காதலன் நுழைந்ததால், மீனாவிடம் இருந்து விலக ஆரம்பித்துள்ளார்.

மேலும், அம்ரிதா தன் பழைய காதலன் சுமித்துடன் சேர்ந்து வேறு ஒரு வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து இருவரும் சேர்ந்து திட்டமிட்டு மீனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் அவரது உடல் மீது ஆயில்,
நெய் ஊற்றி தீவைத்துள்ளனர். அதோடு காஸ் சிலிண்டரையும் திறந்துவிட்டதால் வீடு தீப்பிடித்து சிலிண்டர் வெடித்துவிட்டது. தற்போது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.