Friday, Apr 11, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதி - பதைபதைக்க வைக்கும் தகவல்

Death Israel-Hamas War Gaza
By Sumathi 7 days ago
Report

 பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

போர் பாதிப்பு

கடந்த 2023 முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிலவி வருகிறது. இதுவரை 50,523 பாலஸ்தீனர்களும், 1163 இஸ்ரேலியர்களும் போரில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

gaza

இந்நிலையில் பெற்றோர் ஆதரவற்ற குழந்தைகள் பற்றி பாலஸ்தீன அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிரங்களின்படி, 39,384 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களில் ஒருவரையாவது இழந்திருக்கிறார்கள்.

இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம் - அரசு அனுமதி!

இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம் - அரசு அனுமதி!

தவிக்கும் குழந்தைகள்

இதில் 17,000 குழந்தைகள் பெற்றோரில் இருவரையும் இழந்திருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. உயிர் பிழைத்தவர்கள் உணவு, குடிநீர், மருந்துக்காக நீண்ட போராட்டத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதி - பதைபதைக்க வைக்கும் தகவல் | Gaza S Unprecedented Orphan Crisis Increase

போரில் மருத்துவமனைகள் அழிக்கப்பட்டிருப்பதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், காசாவில் 23 லட்சம் மக்கள் மக்கள் தங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதன் மூலம் வீன உலகில் பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதியாக காசா மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.