ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்; திடீர் தாக்குதல் - 400க்கும் மேற்பட்டோர் கொன்று குவிப்பு!
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 404 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
கடந்த 2023 முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிலவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், காசாவின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 100 பேருக்கு மேலாக உயிரிழந்தனர். புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் பல குழந்தைகளும் கூட உயிரிழந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
404 பேர் பலி
ஹமாஸின் ராணுவ தளங்களைக் குறிவைத்தே தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது. தற்போது இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து தாக்குதலில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.