நடிகை காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு - ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு!
நடிகை காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காயத்ரி ரகுராம்
நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பாஜக மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதனையடுத்து கடந்த ஜனவரி 19-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய பொறுப்பு
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் "அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காயத்ரி ரகுராம், தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil