பீரியட்ஸ் நேரத்தில் அதை மட்டும் செய்யவே மாட்டேன்; ரொம்ப சுயநலம் - பிகில் நடிகை பகீர்!
நடிகை காயத்ரி ரெட்டி தனது குடும்ப வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
நடிகை காயத்ரி ரெட்டி
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான படம் பிகில். இதில், மாரி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ரெட்டி.
2022 ஆம் ஆண்டு நிஷாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகிறார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து தனது குடும்ப வாழ்க்கை குறித்து தகவல்கள் ஷேர் செய்து வருகிறார்.
ரொம்ப செல்ஃபிஷ்
அதன்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், மாதவிடாய் காலத்தில் காபி குடிக்க மாட்டேன். அப்படி குடித்தால் அது எனக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கும். அந்த நேரத்தில் எனக்கு ஏற்படும் வலி காரணமாக பிளாக் அவுட் ஆகிவிடும்.
பீரியட்ஸ் முடிந்து நான்கு நாள் கழித்து தற்போது காபி குடிக்கிறேன். அந்த நேரத்தில் ஏதாவது குடிக்க விரும்பினால் லெமன் டீ அல்லது ஜிஞ்சர் டீ மட்டுமே குடிப்பேன். கஃபைன் அதிகம் உள்ளதால் மாதவிடாய் காலத்தில் யாரும் காபி குடிக்க வேண்டாம்.
ஆனால், இந்த வீடியோ என்னுடைய பீரியட்ஸ் பற்றியது அல்ல நான் ரொம்ப செல்ஃபிஷ் என என் அம்மா அடிக்கடி சொல்வாங்க, ஆமாம் அது உண்மை தான் என்பதை சொல்லத்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.