புகைப்படம் மார்பிங்: பாஜக நிர்வாகி மீது நடிகை காயத்ரி ரகுராம் புகார்!
தனது புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்டதாக பாஜகவைச் சேர்ந்தவர் மீது காயத்ரி ரகுராம் புகாரளித்துள்ளார்.
காயத்ரி ரகுராம்
தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். மாநிலத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பேசியும், சமூக வலைதளங்களில்அவருக்காக இயக்கங்குவதாக கூறப்படும் வார் ரூம் மீதும் பல்வேறு புகார்களை வைத்து வருகிறார்.
பரபரப்பு புகார்
இந்நிலையில், சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைன் வழியாக காயத்ரி ரகுராம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி பாபு, எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.