உயிரை கொல்லும் குரங்கு அம்மை..ஓரின சேர்க்கையாளர்களுக்கு அதிக பாதிப்பா? பகீர் ஆய்வு!
ஓரின சேர்க்கையாளர்களிடையே குரங்கு அம்மை அதிகம் பரவுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
குரங்கு அம்மை
ஆப்பிரிக்க நாடுகளில் Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு Mpox எனப்படும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயால் 517 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதை கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் 13 அண்டை நாடுகளில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தற்போது பாதிப்பு இல்லை என்றாலும் உச்சகட்ட சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த பாதிப்பு காற்றின் மூலம் பரவாது என்றாலும் ஏற்கனவே பாதிப்பில் இருக்கும் நபருடன் உடல் ரீதியான தொடர்பு,
அதிக பாதிப்பா?
இரண்டு மீட்டருக்குள் மூன்று மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்போது நீர்த்துளிகள் மூலமாக இந்த தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள், பல ஆண்களுடன் உடலுறவு வைத்திருக்கும் ஆண்களிடையே இந்த பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் குரங்கம்மை பாதிப்பு பாலியல் ரீதியாக பரவும் தன்மை கொண்டது இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். குரங்கு அம்மை பாலியல் ரீதியாக பரவும் செக்ஸுவல் டிரான்ஸ்மிட்டட் டிசிஸ் வகையைச் சார்ந்தது அல்ல எனவும் அதே நேரத்தில் ஆண்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்களுக்கும் தோல் தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது.
எனவே இதனை முழுமையாக பால்வினை நோயாக வகைப்படுத்த முடியாது என்கின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட 90% கிட்டத்தட்ட ஆண்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் என்றும், 10 சதவீத பெண்கள் மட்டுமே இந்த பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர் என ஆய்வு முடிவுகள் கூறுகிறது.